இந்தியா

வீரப்பெண்ணுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

முக்கிய சாலையில் தனது கணவரை அடித்த நான்கு இளைஞர்களுடன் தைரிய மாக சண்டையிட்டு விரட்டிய இளம் பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

ஆனால், தனக்கு ரொக்கப்பரிசு அளித்ததற்குப் பதில், அனைத்துக் குற்ற வாளிகளையும் கைது செய்ய வேண்டும் என அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

உ.பி. மாநிலம் கச்சேரி புல் பகுதியில் பைக்குடன், கார் ஒன்று மோதியது. காரில் இருந்து இறங்கிய நான்கு பேர், பைக் ஓட்டி வந்த நபரை தாக்கினர். அப்போது, தனது கணவரைக் காப்பாற்ற அந்த நான்கு பேருடனும் சண்டையிட்ட மம்தா என்ற அந்த இளம் பெண் அவர்களை விரட்டியடித்தார்.

மம்தாவின் தைரியத்தைப் பாராட்டி அகிலேஷ் யாதவ் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தார். இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய மூவரில், ஒருவர் சுதந்திரமாகத் திரிவதாகவும், அவர் சமாஜ்வாதி கட்சி முக்கிய தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மம்தா கூறியுள்ளார்.

ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கா விட்டால், தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மம்தா மிரட்டல் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT