ம.பி.யின் இந்தூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் உ.பி. மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் பேசினார்.
அப்போது அவர், “நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வருவ தற்கு முன் ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருதை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வயதுடன் ஒப்பிட் டார்.
மன்மோகன் சிங் வயதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந் திய ரூபாயின் மதிப்பும் ஒன்றாக இருப்பதாகக் கூறினார். தற்போது பிரதமர் மோடியின் தாயார் வய துக்கு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது” என்றார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறும்போது, “தகுதியற்ற வார்த்தைகளை பேசுவதும் ஒரு வரின் தாயாரை அரசியலுக்கு இழுப்பதும் முறையல்ல.
பிரத மரின் தாயாருக்கு எதிராக, தொடக்கத்தில் இருந்தே காங்கி ரஸ் முறையற்ற போக்கை கடைப் பிடிக்கிறது. பிரதமருக்கு எதிரா கவும் இதுபோல் பேசப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற சர்ச்சைக் குரிய கருத்துகளை ஏற்றுக்கொள் கிறாரா என அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.