கர்நாடகாவில் கரும்பு கொள் முதல் விலை உயர்வு மற்றும் நிலுவைத் தொகை கோரி விவசாயி கள் கடந்த 5 நாட்களாக போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயி களுக்கு ஆதரவாக பாஜக கள மிறங்கியதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட் களாக குமாரசாமிக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் வெளி யாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியது. இதனால் கோபமடைந்த குமாரசாமி நேற்று முன்தினம் கூறியதாவது:
எனக்கு எதிரான செய்தியை வெளியிடுவதில் ஒரு சில ஊடகங் கள் குறியாக உள்ளன. என்னைப் பற்றிய சிறிய செய்தியை கூட, திரித்து பூதாகரமாக்கி வெளி யிடுகின்றன. இதனால் எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படு கிறது.
ஊடகங்கள் எனக்கு எதிராக புதுப்புது பிரச்சினையை உரு வாக்குகின்றன. இனி ஊடகங் களுடன் பேச மாட்டேன். பத்திரிகையாளர்களுக்கு தனிப் பட்ட முறையில் பேட்டியளிக்க மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த மாட்டேன். ஏதாவது மக்களுக்கு அறிவிக்க விரும்பினால் அறிக்கை வெளி யிடுவேன். அதை வெளியிட விருப்பம் இருந்தால் ஊடகங்கள் வெளியிடலாம். இல்லையென் றால், விட்டுவிடலாம்” என்று ஆவேசமாகக் கூறினார்.