கடந்த 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர் கலவர வழக்குகளை விசாரிக்க கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றம் புலனாய்வுக் குழுவை நியமித்தது. அந்த குழு தற்போது 8 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இதில் ஹர்தேவ் சிங், அவதார் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அஜய் பாண்டே கடந்த வாரம் 2 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று வெளியிட்டார். அதன்படி ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அதிகாரி யாஷ்பால் சிங்கிற்கு மரண தண்டனையும் நரேஷ் ஷெராவத்துக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரச்சினைகளால் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திகார் சிறை வளாகத்தில் நீதிபதி தண்டனை விவரத்தை அறிவித்தார். இந்த வழக்குகளில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.