இந்தியா

ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா சுயசரிதை நூல் வெளியிட விருப்பம்: தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, அடுத்த சில மாதங்களில் தனது சுயசரிதை நூலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் வெளியிட்ட நூலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பற்றி தெரிவிக்கப்பட்ட தகவல்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான மார்கரெட் ஆல்வா, தனது சுயசரிதையை அடுத்த 4 மாதங்களில் வெளி யிடப்போவதாக தெரிவித் துள்ளது பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

72 வயதாகும் ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் பதவிக்காலம், செவ்வாய்க் கிழமையுடன் முடிவடைந்தது. இதையொட்டி ஆளுநர் மாளிகை யில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் மார்கரெட் ஆல்வா கூறியதாவது: “அரசிய லில் பெண்கள் நுழைய தயங்கிய காலத்தில், துணிச்சலுடன் காங் கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினேன். எனது 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை குறித்து எனது சுயசரிதையில் தெரிவிக்கவுள்ளேன்.

ஆனால், சர்ச்சையை ஏற் படுத்துவதற்காக நான் நூல் எழுத வில்லை. அத்தகைய கருத்துகள் எனது நூலில் இடம்பெறாது. அடுத்த 4 மாதங்களில் நூலை வெளியிடவுள்ளேன்.

ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. தேர்தலில் போட்டியிட்டு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற் கும் எனது கால கட்டம் முடிந்து விட்டதாக கருதுகிறேன்” என்றார்.

மார்கரெட் ஆல்வா உத்தர கண்ட் மாநில ஆளுநராக கடந்த 2009-ம் ஆண்டு நியமிக்கப் பட்டார். பின்னர் 2012-ம் ஆண்டு ராஜஸ்தான் ஆளுநராக மாற்றப்பட்டார்.

SCROLL FOR NEXT