இந்தியா

மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கர்நாடகாவில் இடைத்தேர்தல் தேவையற்றது: காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் கருத்து

இரா.வினோத்

கர்நாடகாவில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதற்கு காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கர்நாடக‌ பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலை வருமான எடியூரப்பா கூறும் போது, “3 மக்களவை தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடத்து வது தேவையற்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு சரியானதல்ல. இருப்பினும் நாங்கள் வெற்றிபெறும் நோக் கில் வேட்பாளரை நிறுத்துவோம். இதுகுறித்து திங்கள்கிழமை எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் களுடன் ஆலோசனை நடத்தியுள் ளேன்” என்றார்.

மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா கூறும்போது, “மக்களவை பொதுத் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு ஆகும். தேர்தல் ஆணையம் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT