இந்தியா

லாலுவின் கோரிக்கையை நிராகரித்தார் மாயாவதி: பாஜகவுக்கு எதிராக முலாயமுடன் கூட்டு சேர மறுப்பு

ஆர்.ஷபிமுன்னா

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்குடன் கூட்டு சேர வேண்டும் என்ற லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நிராகரித்துவிட்டார்.

பிஹாரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுவும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ்குமாரும் கூட்டணி அமைத்துள்ளனர். தங்களைப்போல் பாஜகவுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று லாலு பிரசாத் கோரியிருந்தார். லாலு முயற்சி எடுத்தால், மாயாவதி தலைமையிலான கட்சியுடன் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக முலாயம் சிங் பதிலளித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் மாயாவதி புதன்கிழமை கூறியதாவது: முலாயம் சிங் யாதவ் மதவாத சக்திகளுடன் ரகசிய உடன்பாடு வைத்து ஆட்சியை பிடிப்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார். அவர், அரசியலில் சந்தர்ப்பவாதத்தை நம்புபவர். முலாயமுக்கும், லாலுவுக்கும் சுயமரியாதை என்பது ஆட்சிக்கு அடுத்தபடியாகத்தான். ஆனால், எனக்கு ஆட்சியை விட சுயமரியாதைதான் முக்கியம்.

1995-ம் ஆண்டு முலாயமின் ஆட்கள் என்னை தாக்கியது போல், லாலுவுக்கு நெருக்கமானவர் கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டி ருந்தால், அவருடன் கூட்டு சேரு வாரா?” என்றார்.

1995-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி லக்னோவி்ன் மீராபாய் மார்கில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த மாயா வதியை உயிருடன் எரித்துக் கொல்ல சிலர் முயன்றதாக அப் போது புகார் எழுந்தது. இதை மன தில்வைத்துத்தான் மாயாவதி அவ்வாறு கூறியுள்ளார்.

மாயாவதியின் இந்தக் கருத் திற்கு பின் முலாயம் சிங் கூறியுள்ள தாவது: ‘நாங்கள் தனித்தே போட்டி யிடுவோம். உத்தரப்பிரதேசத் தில் யாருடனும் கூட்டு வைப்பதற்கான பேச்சே இனி இல்லை’ என்றார்.

SCROLL FOR NEXT