ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிண்டிகேட் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு கடன் வரம்பு தொகையை அதிகரிப்பதற்கு லஞ்சம் பெற்றார் என்பது ஜெயின் மீதான குற்றச்சாட்டு.
இது தொடர்பாக பெங்களூர், போபால், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 20 இடங்களில் சிபிஐ ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டது.
சோதனையின் போது, ரூ.50 லட்சம் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.