இந்தியா

காஷ்மீர் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள், 1 ராணுவ வீரர் பலி

ஏஎன்ஐ

காஷ்மீரில் சோபூர்  நகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர. தீவிரவாதிகளுடனான சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் , ”காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள சோபூர் நகரிலுள்ள  பசல்போரா பகுதிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) தேடுதல் வேட்டையை பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் முடக்கி விட்டனர்.

இதில்  தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை தாக்கியதைத் தொடர்ந்து  இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிர்வாதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் பலியானார்” என்றார்.

இந்தச் சண்டை காரணமாக அப்பகுதியிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  மூடப்பட்டன.முன்னதாக காஷ்மீரின் வடக்குப் பகுதியில் வியாழக்கிமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குலில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT