இந்தியா

‘ஐ.என்.எஸ். காமோர்த்தா’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு

செய்திப்பிரிவு

பாதுகாப்புப் படைகள் விழிப்புடன் பணியாற்றுவதே நமது பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு மிகச்சிறந்த உத்தரவாதம் என்று பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்க் கப்பலான ‘ஐ.என்.எஸ். காமோர்த்தா’ கடற்படையில் இணையும் விழா விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று இக்கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

இதைத் தொடர்ந்து ஜேட்லி பேசும்போது, “பூகோள ரீதியில் மிக முக்கிய இடத்தில் இந்தியா அமைந்துள்ளது. மிக நீண்ட கடற்கரையை நாம் கொண்டுள்ளோம். அண்டை நாடுகளால் ஏற்படும் தொந்தரவும் நீண்டகாலமாக உள்ளது. எனவே பாதுகாப்புப் படைகள் விழிப்புடன் பணியாற்றுவதே நமது பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கான மிகச் சிறந்த உத்தரவாதம் ஆகும்” என்றார்.

சுமார் 3,400 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், மணிக்கு 25 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது. நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவதற்காகவே உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் வசதியும் இதில் உள்ளது.

SCROLL FOR NEXT