இந்தியா

விருப்பத்துக்கு மாறாக திருமணம்: குடும்ப கவுரவ போர்வையில் மகளையே சுட்டுக்கொன்ற துயரம்

செய்திப்பிரிவு

உத்திரப்பிரதேசத்தில், தனது விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துகொண்ட மகளை, குடும்ப கவுரவத்தை பேணுவதாக கூறி அவரது தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் நவுராலி நகரத்தைச் சேர்ந்த ராம் சந்திரா என்பவர் தனது 22 வயது மகளை, வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார்.

மாவட்ட காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக காவல்துறை அதிகாரி பிகாரி மிஸ்ரா தெரிவித்தார்.

விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதாலே இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக கொலையுண்ட பெண்ணின் தந்தை ராம் சந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT