இந்தியா

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 3 தீவிரவாதிகள், 1 போலீஸார் பலி

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகினர். இந்தத் தாக்குதலில் போலீஸார் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், ”ஸ்ரீ நகரிலுள்ள ஃபதே கல் பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர்  சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸார் ஒருவர் கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் தரப்பில் 3 பேர் பலியாகினர்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தொலைப்பேசி மற்றும் இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.

முன்னதாக வடக்கு காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிராவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT