நேபாளத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் சாலை, விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 பேர் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து நேபாளத்துக் கான இந்திய தூதரகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலையால் 200 இந்திய பக்தர்கள் சிமிகோட்டில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனை வரும் பாதுகாப்பாக இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி வைக் கப்படுவார்கள். அதற்கு தேவை யான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைலாச யாத்திரை சென்ற 1500 பேர் கடந்த ஜூலையில் இதே சிமிகோட் பகுதியில் சிக்கினர். அவர்களை இந்திய தூதரகம் பாதுகாப்பாக மீட்டது நினைவுகூரத்தக்கது.