இந்தியா

தேசிய அரசியலின் பெரும் தூண் கருணாநிதி: ரவிசங்கர் பிரசாத் புகழாரம்

ஆர்.ஷபிமுன்னா

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது இரங்கலில் அவர், ‘தேசிய அரசியலின் பெரும் தூணாக விளங்கியவர் கருணாநிதி எனப் புகழாரம் சூட்டியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ''தேசத்தின் மிக உயர்ந்த தலைவரும், தமிழகத்தின் முதல்வர்களில் புகழ்பெற்றவருமான மு.கருணாநிதியின் துக்கமான மறைவிற்காக என் ஆழ்ந்த இரங்கல். இவர், இந்திய அரசியலில் பெரும் தூணாக விளங்கியவர். அவரது சக்திவாய்ந்த பேச்சாற்றல், நையாண்டி பேச்சு, ஆளுமைப்பண்பு, தமிழக வளர்ச்சியில் அவரது பங்கு இவை அனைத்தும் என்றும் நினைவில் நிற்கக் கூடியவை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT