இந்தியா

சசிதரூர் ஜாமீனுக்கு எதிர்ப்பு: அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தர விட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், தெற்கு டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கடந்த 2014-ம் ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார்.

இந்த வழக்கில் நீண்ட தாமதத் திற்கு பிறகு சசிதரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனைவியை கொடுமைப் படுத்தியதாகவும் தற்கொலைக் குத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிதரூர் கடந்த ஜூலை 5-ம் தேதி முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் இதற்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த தீபக் ஆனந்த் என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “சசிதரூருக்கு எதிராக குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விசாரணை நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு, அவருக்கு சம் மன் அனுப்பியுள்ளது. ஆனால் சசிதரூர் நீதிமன்றத்தில் ஆஜரா வதற்கு பதிலாக கூடுதல் அமர்வு நீதி மன்றத்தைஅணுகியுள்ளார். நீதிபதி தவறுதலாக அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார். இது குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது” என்று கூறியுள்ளார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.கே. கவுபா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தற்போதைய சர்ச்சை எழுந்துள்ளதன் பின்னணியில் வழக்கை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டார். வழக்கை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT