இந்தியா

ஆண்டுக்கு ஒரு முறைதான் நீட் தேர்வு நடத்தப்படும்: புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

பிடிஐ

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைன் மூலம் நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதுதொடர்பான புதிய கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தொழில் நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை என்ற வீதத்தில், இந்தத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்தது.

இந்தத் தேர்வு நடைமுறைகளை மாற்றியமைக்கும் விதமான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. அதில், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இத்தேர்வுகள் சிபிஎஸ்இ-க்கு பதிலாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) என்ற அமைப்பு ஆன்லைன் முறையில் நடத்தும் எனவும் அதில் கூறப்பட்டி ருந்தது.

இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந் தது. இந்த அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியறுத்தி வந்தன.

இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமது பரிந்துரை அறிக்கையை மனிதவள மேம் பாட்டுத் துறைக்கு அண்மையில் அனுப்பியது. அந்த அறிக்கையில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும்பட்சத்தில், மாண வர்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு உள்ளாவார்கள் என்றும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப் பட்டால் கிராமப்புற மாண வர்கள் வெகுவாக பாதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாற்றிக் கொண் டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய கால அட்டவணையில், நீட் தேர்வானது, அடுத்த ஆண்டு மே 5-ம் தேதி பழைய முறையிலேயே (தாள் மற்றும் பேனா) நடை பெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, மேற்குறிப்பிட்ட தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்வதற்காக நாடு முழுவதும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்த மையங்கள் அமைக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT