இந்தியா

திருமலையில் பவித்ர உற்சவம்

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தற்போது நடைபெற்று வரும் பவித்ர உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, புனித பவித்ர மாலைகள் சமர்பணம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், ஜீயர் சுவாமிகள் தலைமையில் தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் பவித்ர மாலைகளை தங்களது தலையில் சுமந்து வந்து கோயில் பலி பீடம், கொடி மரம், விமான வெங்கடேஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சமர்பித்தனர்.

இதற்கு முன்பாக, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு ஸ்தபன திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பவித்ரோற்சவத்தின் 3ம் நாளான இன்று, பூரணாஹுதி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT