இந்த நாட்டை இந்து தேசம் என்று அழைக்க யாரும் வெட்கப்படக்கூடாது என்று சிவசேனாக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “இந்துஸ்தானம் என்பது இந்து தேசமே... இந்தியாவின் அடையாளம் இந்துத்துவா, இதற்கு பிற அடையாளங்களை விழுங்கும் திறன் உள்ளது” என்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே கூறும்போது, “மோகன் பகவத் கூறிய கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். இந்தியாவை இந்துக்களின் நாடு என்று அழைத்தால் அதில் என்ன தவறு?
எனது தந்தை பால் தாக்கரேயும் இந்தியாவை இந்து தேசம் என்றே அழைத்தார். நாங்கள் எப்படி எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியும்?
இந்தியாவை இந்து தேசம் என்று அழைப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. இந்த நாட்டை இந்து தேசம் என்று அழைக்க ஒருவரும் வெட்கப்பட வேண்டியத் தேவையில்லை.
என்று கூறியுள்ளார்.