சமாஜ்வாதி கட்சியில் சேரத் தயாராக உள்ளதாக அமர்சிங் கூறியுள்ளார்.
முலாயம் சிங்கின் நெருங்கிய சகாவாக இருந்த அமர்சிங், கடந்த 2010-ம் ஆண்டு சமாஜ் வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். பின்னர், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் அமர்சிங் இணைந்தார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் லக்னோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் சந்தித் தனர். பிறகு டெல்லி செல்வதற்காக லக்னோ விமான நிலையத்திற்கு வந்த இருவரும், அரை மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசினர். பிறகு, விமானத்திலும் அருகருகே அமர்ந்து டெல்லி வரை பேசியபடியே சென்றுள்ளனர்.
இது குறித்து கடந்த புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், “எனது உடல்நிலை சரியில்லாததால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிகிச்சைக் காக சிங்கப்பூர் செல்ல வேண்டி உள்ளது. எனவே, முன்பைப்போல என்னால் கட்சிப் பணியாற்ற இயலாத நிலையில் இருக்கிறேன். சமாஜ்வாதியில் சேருமாறு முலாயம் சிங் என்னை கேட்டுக்கொண்டால், அக்கட்சியில் மீண்டும் இணைய தயாராக உள்ளேன்” என்றார்.
ஆசம்கான் எதிர்ப்பு
அமர்சிங்கிற்கு நெருக்கமான வராகக் கருதப்படும் நடிகை ஜெயப் பிரதா, இரண்டாவது முறையாக ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2009-ம் ஆண்டு வாய்ப்பு கேட்டபோது, சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் எதிர்ப்பு தெரிவித் தார். முன்னதாக அமர்சிங் கட்சியில் இருந்து வெளியேற ஆசம்கான் தான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமர்சிங் மீண்டும் சமாஜ்வாதியில் இணைய ஆசம்கான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகை யில், அமர்சிங் கலந்து கொண்ட பூங்கா திறப்பு விழா உட்பட இரண்டு விழாக்களில் பங்கேற்காமல் ஆசம்கான் புறக்கணித்தார்.
இவரை தற்போது சமாதானப் படுத்தும் முயற்சியில் முலாயம்சிங் மற்றும் அவரது மகனும், உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஈடுபட்டுள்ளனர்.
யார் இந்த அமர்சிங்?
தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்சிங்கும், முலாயம் சிங்கும் கருதப்பட்டனர். ஒரு காலத்தில், இந்த இருவரும் இல்லாமல் தேசிய அரசியலில் கூட்டணிகள் உருவானதில்லை எனக் கூறப்பட்டது. தேவைப்படும் கூட்டணிகளை உருவாக்குவது, வேண்டாம் என்றால் கூட்டணியை உடைத்து விடுவது என்று இந்த இருவரும் பலம் வாய்ந்தவர்களாக வலம் வந்தனர்.
அரசியலில் மட்டுமின்றி, தொழில திபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், சமூக சேவகர்கள் என பலதரப்பிலும் அமர்சிங் நண்பர்களைப் பெற்றுள் ளார். இந்த தொடர்புகள் அனைத் தையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் அவருக்கு நிகர் அவர்தான் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஒரே நாள் காலையில் முக்கிய மான அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமர்சிங், மாலையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் பார்ட் டியில் இருப்பார். இரவு ஒரு தொழில திபருடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார் எனவும் அமர் சிங்கை பற்றி கூறப்படுவது உண்டு.