நான் சர்வாதிகாரியாக இருந்தி ருந்தால், மகாபாரதத்தை 1-ம் வகுப்பில் இருந்து கற்பிக்க உத்தரவிடுவேன் என்று நீதிபதி அனில் தவே கூறியுள்ள கருத்துக்கு, பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்ற நீதிபதி அனில் தவே பேசும்போது, “நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் கீதையையும், மகாபாரதத்தையும் நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பில் இருந்து கற்பிக்கும்படி உத்தர விட்டிருப்பேன். நல்லவை எங்கி ருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை” என்றார்.
இதற்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: நீதிபதி தவே தெரிவித்துள்ள கருத்தை நான் முற்றிலும் மறுக்கிறேன். இந்தியா போன்ற வேறுபாடுகள் மிகுந்த நாட்டில் இதுபோன்று எதையும் கட்டாயப்படுத்த முடியாது. அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு கேடாக அமையும்.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் தங்கள் குழந்தைகள் கீதை படிப்பதை விரும்பாமல் போக லாம். அப்போது அவர்களை கட்டாயப்படுத்த முடியுமா?
பகவத் கீதை நன்னெறிகளையே போதிக்கிறது, அதற்கும் மதத் துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால் குர்-ஆன்தான் நன்னெறிகளை போதிக்கிறது என்று முஸ்லிம்களும், பைபிள் என்று கிறிஸ்தவர்களும், குரு கிரந்த சாஹிப் என்று சீக்கியர்களும், ஜெந்த் ஆவஸ்தா என்று பார்சிகளும் சொல்வார்கள்.
எனவே இதுபோன்ற நிர்பந் தங்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதே என் கருத்து. இவ்வாறு மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.