இந்தியா

போலீஸ்காரர் மீது காரை மோதவிட்டு 1 கி.மீ இழுத்துச் சென்ற டிரைவர் கைது: செல்போனில் பேசியதை தடுத்ததால் ஆத்திரம்

செய்திப்பிரிவு

சண்டீகரில், செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியவரைத் தடுக்க முயன்ற டிராபிக் போலீஸ்காரர் மீது காரை மோதிவிட்டு, சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு அவரை இழுத்துச் சென்ற கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் மற்றொரு காரில் சென்றவர்களால் வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்றுள்ளது. போக்குவரத்துக் காவலர் ஒருவர், செல்போனில் பேசியபடி கார் ஓட்டிவந்தவரை, காரை நிறுத்தும்படி சைகை செய்கிறார். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக போலீஸ்காரர் மீது மோதுகிறது.

தடுமாறிய போலீஸ்காரர், காரின் முன்புற பானட் மீது சரிந்து விழுகிறார். அவர் காரின் முன்புறப்பகுதியைப் பிடித்தபடி தவித்துக் கொண்டிருந்தாலும், கார் வேகமாக ஒரு கி.மீ. தொலைவுக்கு அவரை இழுத்துச் செல்கிறது.

இக்காட்சிகள் மற்றொரு காரில் இருந்தவர்களால் வீடியோவாக படம்பிடிக்கப்பட் டுள்ளன. விபத்துக்குள் ளான போக்குவரத்துக் காவலர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட கார் டிரைவர் அப்தாப் சிங் கில் என்பவரையும், அக்காரில் பயணித்த மோகா என்பவரையும் போலீஸார் விரட்டிப்பிடித்து கைது செய் துள்ளனர்.

இதுதொடர்பாக சண்டீகர் காவல்துறை ஐ.ஜி. ஆர்.பி உபாத்யாயா கூறும்போது, “இச் சம்பவம் எனக்கு அதிர்ச்சி யளிக்கிறது. கைது செய்யப் பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைக் கப்படும். சம்பவத்தின்போது, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மது அருந்தியிருக்கவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT