இந்தியா

கருணாநிதி மறைவு: டிஎன்பிஎல் ஆட்டங்கள் ரத்து

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் ஆட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன. இதேபோல் நேற்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் கோவை கிங்ஸ் - காரைக்குடி காளை அணிகள் மோத இருந்தன.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி காலமான தைத் தொடர்ந்து இந்த இரு ஆட்டங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. அத்துடன் கருணா நிதியின் மரணத்துக்கு டிஎன்பிஎல் அமைப்பு சார்பில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள இந்த ஆட்டங் கள் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT