இந்தியா

அரசு நில விற்பனை புகார்: அஜித் பவார் விளக்கம்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் முந்த்வா பகுதியில் உள்ள ரூ.1,800 கோடி மதிப்பிலான 40 ஏக்கர் அரசு நிலம், துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு ரூ.300 கோடிக்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பதிவாளர் அலுவலகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் பார்த் பவார் பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் நேற்று கூறும்போது, ‘‘அரசு நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் விகாஸ் கார்கே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் உண்மை வெளிவரும்’’ என்றார்.

SCROLL FOR NEXT