இந்தியா

ராகுல் குற்றச்சாட்டுக்கு: அமைச்சர் அமித் ஷா பதில்

செய்திப்பிரிவு

அர்வால்: பாஜக வெற்றி பெறுவதற்காக வாக்குகள் திருடப்படுகின்றன என பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல முறை குற்றம் சாட்டினார்.

பிஹாரில் நாளை இரண்டாவது மற்றும் இறுதி கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பிஹாரின் அர்வல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேசியதாவது:

வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டு வருவதால், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை ராகுல் காந்தி சுமத்துகிறார். வாக்கு அதிகார யாத்திரையை அவர் பிஹார் முதல் இத்தாலி வரை மேற்கொள்ளட்டும். நாங்கள் ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் அனுமதிக்க மாட்டோம்.

வாக்குகள் திருடப்படுவதாக அவர் நினைத்தால், தேர்தல் ஆணையத்திடம் அவர் ஏன் முறையாக புகார் அளிக்கவில்லை? இவ்வாறு அமித் ஷா கூறினார்.

SCROLL FOR NEXT