இந்தியா

காஷ்மீரின் குப்வாராவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

குப்வாரா: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவம் குறைந்திருந்தது.

இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் கேரன் என்ற இடத்தில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டதும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். ஊடுருவல்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோல் குப்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி நுழைய முயன்ற இரு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT