இந்தியா

பிஹாரில் ஆட்சி மாற்றம் தேவை: பிரியங்கா காந்தி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கத்வா: பிஹாரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஹாரின் கடிஹார் மாவட்டத்தின் கத்வாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசியதாவது: ஜனநாயகத்துக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் மெகா கூட்டணி போராடுகிறது. சுதந்திரத்தின் போது மகாத்மா காந்தி போராடியதுபோல், தற்போது மெகா கூட்டணி போராடுகிறது. நரேந்திர மோடி மக்களை அடக்கி நாட்டை ஆட்சி செய்கிறார். அரசியல் சாசனத்தையும், ஜனநாயக நடைமுறைகளையும் பலவீனப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

அடிப்படை உரிமைகளில் முக்கியமானது வாக்குரிமை. அந்த வாக்குரிமையையும் திருட தொடங்கியுள்ளனர் பாஜக.வினர். பிஹாரில் ஆட்சி மாற்றம் அவசியம். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT