முகேஷ் சஹானி 
இந்தியா

பிஹார் முதல்கட்ட தேர்தலில் 80-க்கும் மேற்பட்ட இடங்களை மகா கூட்டணி வெல்லும்: முகேஷ் சஹானி

வெற்றி மயிலோன்

பாட்னா: பிஹாரின் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி 80-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று விகாஷீல் இன்சான் கட்சியின் (விஐபி) ஒருங்கிணைப்பாளரும், மகா கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சஹானி தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “சாதி, மதம் மற்றும் பிரிவுகளைக் கடந்து வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், மாநில அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், மகா கூட்டணியை ஆதரிக்கின்றனர். முதல்கட்ட தேர்தலில் நாங்கள் 80-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம். பிஹாரில் மாற்றத்திற்கான அலை உள்ளது, எனவே ஒரு திட்டவட்டமான மாற்றம் இருக்கும்” என்று முகேஷ் சஹானி கூறினார்.

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (நவம்பர் 6) தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது மாநில வரலாற்றில் மிக அதிகமான வாக்குப்பதிவு சதவீதமாகும். பிஹாரில் வாக்குப்பதிவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்பது ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT