கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று தொடங்கினர்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை ஆணையர் ஞானேஷ் பார்தி மற்றும் மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் ஆகியோர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை நேற்று தொடங்கினர்.