இந்தியா

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 16 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

நெல்லூர்: சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நெல்லூர் மாசர்லா பகுதியில் நேற்று காலை பெட்ரோல் பிடித்து கொண்டு ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது. அப்போது வேகமாக வந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உலவபாடு, காவலி அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் லோகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக மாசர்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT