பெங்களூரு: கர்நாடகாவில் வட மாவட்டங்களான விஜயபுரா, பாகல்கோட்டை, பெலகாவி ஆகியவற்றில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விநியோகம் செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 ஆதரவு விலையாக அரசு நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கடந்த 31-ம் தேதி பெலகாவியில் தொடர் போராட்டம் தொடங்கினர். பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எதிரில் விவசாயிகள் 7-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த ஆலைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அதானி, சிக்கோடி, குர்லாபுரா,
கோகாக் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்தனர்.