இந்தியா

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜேடியு லலன் சிங் மீது வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான லலன் சிங் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கட்சித் தொண்டர்களுக்கு வெளியிட்ட வீடியோவில், "வாக்குப் பதிவு நாளில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கெஞ்சினால், நீங்களே அவர்களை அழைத்து செல்லுங்கள். வாக்களித்ததும் அவர்களை மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கு அவர்களை படுக்கையில் படுக்க வையுங்கள். இந்தப் பொறுப்பை ஜேடியு தொண்டர்கள் இப்போதே ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.இதையடுத்து லலன் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT