இந்தியா

தீவிரவாதி என எழுத தெரியுமா? - தேஜஸ்விக்கு ஒவைசி கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹார் மாநிலம் கிஷன்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் உரையாற்றிய ஏஐம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைசி பேசியதாவது:

ஒவைசி ஒரு தீவிரவாதி, ஒரு வெறியர் என்று தேஜஸ்வி கூறியுள்ளார். நான் என் மதத்தை பெருமையுடன் பின்பற்றுவதால் அவர்
அப்படி என்னை அழைக்கிறார். என் முகத்தில் தாடியும் தலையில் தொப்பியும் வைத்தால் உங்கள் கண்ணுக்கு தீவிரவாதியாக தெரிகிறதா?.

எங்களைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு. ‘‘எக்ஸ்டிரிமிஸ்ட்’’ என்ற வார்த்தையை உங்களால் ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுத முடியுமா? அவர் இந்த வார்த்தையை பாகிஸ்தானிலிருந்து கடன் வாங்கி பேசியுள்ளார். தேஜஸ்வியின் இந்த பேச்சு சீமாஞ்சலில் உள்ள முஸ்லிம் மக்களை அவமதிப்பது போல் உள்ளது. இவ்வாறு ஒவைஸி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT