இந்தியா

பிஹார் தேர்தல் காரணமாக நிரம்பி வழியும் ஓட்டல்கள்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைநகர் பாட்னாவில் உள்ள பிரபல ஓட்டல்களில் தங்கி உள்ளனர்.

குறிப்பாக மவுரியா ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் அரசியல் கட்சிகள் முன்பதிவு செய்துள்ளன. இதுபோல சாணக்யா ஓட்டலில் தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்ய முயற்சித்தால், 'விற்றுத் தீர்ந்துவிட்டது' என தகவல் வருகிறது. மற்ற பெரிய ஓட்டல்களிலும் இதை நிலைதான் உள்ளது.

இதனால், ஓட்டல் அறைகளுக்கு ஓர் இரவுக்கு கட்டணம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT