லக்னோ: உ.பி.யை சேர்ந்த பெண் ஒருவர் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் அளித்த புகார் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
பிறகு அவர் பொய் புகார் அளித்தது தெரியவந்ததால் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை லக்னோவில் உள்ள எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் அப்பெண்ணை குற்றவாளி
என அறிவித்து அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சிறப்பு நீதிபதி விவேகானந்த் சரண் திரிபாதி தனது தீர்ப்பில், “அரசு இழப்பீடு பெறுவதற்காக எஸ்சி/எஸ்டி சட்டத்தை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.