இந்தியா

சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் வெள்​ளி​விழா ஆண்டை முன்​னிட்​டு, ரூ.324 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட புதிய சட்​டப்​பேரவை கட்​டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்​கிறார்.

நாட்​டின் 26-வது மாநில​மாக சத்​தீஸ்​கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி உதய​மானது. இதன் முதல் சட்​டப்​பேரவை கூட்​டம் ராய்ப்​பூரில் உள்ள கல்​லூரி​யில் அமைக்​கப்​பட்ட தற்​காலிக கூடாரத்​தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்​றது.

          

இந்​நிலை​யில் புதிய ராய்ப்​பூர் நகரில் 52 ஏக்​கர் நிலத்​தில் புதிய சட்​டப்​பேரவை கட்​டிடம் ரூ.324 கோடி செல​வில் கட்ட கடந்த 2020-ம் ஆண்டு அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. இதன் கட்​டு​மான பணி​கள் தற்​போது நிறைவடைந்​துள்​ளன. மிக நவீன​மாக கட்​டப்​பட்​டுள்ள இந்த கட்​டிடத்​தில் சட்​டப்​பேரவை, சட்​டப்​பேரவை செயல​கம் மற்​றும் மத்​திய அரங்கு என 3 முக்​கிய பகு​தி​கள் உள்​ளன. அனைத்து பகு​தி​களும் சத்​தீஸ்​கர் பாரம்​பரி​யம் மற்​றும் நவீன கட்டிடக்கலை அம்​சங்​களை இணைத்து உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதன் உள்​பகுதி அரண்​மனை போல​வும், வெளிப்​புற வடிவ​மைப்பு ராஷ்டிரபதி பவனை போல​வும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

சத்​தீஸ்​கரில் தற்​போது 90 எம்​எல்​ஏ.க்​கள் உள்​ளனர். ஆனால், சட்​டப்​பேர​வை​யில் 120 உறுப்​பினர்​கள் அமரும் வகை​யில் இடவசதி செய்​யப்​பட்​டுள்​ளது. முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் தலை​மை​யின் கீழ் சத்​தீஸ்​கர் மாநிலம் உரு​வான​தால், சட்​டப்​பேர​வை​யின் நுழைவுப் பகு​தி​யில் வாஜ்​பாய் சிலை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் வெள்​ளி​விழாவை முன்​னிட்​டு, புதிய சட்​டப்​பேரவை கட்​டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்​கிறார். இதில் மாநில ஆளுநர், முதல்​வர் மற்​றும் அமைச்​சர்​கள்​ கலந்​து கொள்​கின்​றனர்​.

SCROLL FOR NEXT