இந்தியா

தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது.

மரபுப்படி உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகவுள்ள நீதிபதி சூர்யகாந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான குழு பரிந்துரைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சூர்யகாந்த் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 24-ம் தேதி பதவியேற்று, 2027 பிப்ரவரி 9-ம் தேதி ஓய்வு பெறுவார்.

SCROLL FOR NEXT