கோப்புப்படம் 
இந்தியா

லத்தூரில் அம்பேத்கருக்கு சிலை: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் 75 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்படாததால் பணிகளை தொடங்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதியுடன் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக லத்தூர் எம்எல்ஏ அபிமன்யு பவார் நேற்று முன்தினம் கூறினார். “மீதமுள்ள பணிகளை முடிக்க கூடுதலாக ரூ.12 கோடி தேவைப்படும். அதைப் பெறுவதற்கான முயற்சிகளை தொடர்வேன்" என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT