புதுடெல்லி: கேரளாவில் சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக உலக வங்கி 280 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500 கோடி கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முதியோர் பயன்பெறுவர். மக்கள் தேவையான மருத்துவ உதவிகளைப் பெறவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் இந்த கடனுதவி திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.