இந்தியா

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்​யப்​படும். இது தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள சுங்​கச்​சாவடி கழி​வறை​களுக்கு மட்​டுமே பொருந்​தும். இந்த பரிசு திட்​டம் அக்​டோபர் 31-ம் தேதி வரை செல்​லும்.

இத்​திட்​டத்​தின் கீழ் ரூ.1,000 பெற, ‘ராஜ்​மார்க்​யாத்​ரா’ செயலியை பதி​விறக்​கம் செய்யவேண்​டும். அதில், பெயர், எந்த இடத்​தில் சுங்​கச்​சாவடி கழி​வறை உள்​ளது, தங்​கள் வாக​னத்​தின் பதிவு எண், மொபைல் எண் போன்ற தகவல்​களை அளிக்க வேண்​டும். அத்​துடன் சுத்​தமில்​லாத கழி​வறை தொடர்​பான புகைப்​படத்தை பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அவற்றை ஆய்வு செய்த பிறகு, சம்​பந்​தப்​பட்ட வாக​னத்​தின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்​யப்​படும். ஒரு நாளைக்கு ஒரு முறைமட்​டுமே இதை பயன்​படுத்த முடி​யும். இந்த பரிசு தொகையை பணமாகவோ, வேறு யாருக்கோ மாற்ற முடி​யாது. தேசிய நெடுஞ்​சாலை துறை கட்​டிய கழி​வறை​கள், பராமரிக்​கும் கழி​வறை​கள் மட்​டுமே இத்​திட்​டத்​தின் கீழ் பொருந்​தும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT