இந்தியா

ஒடிசாவில் விசாரணை நடத்த இளைஞரை அனுப்பிய எஸ்ஐ

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவின் பத்ரக் மாவட்டம், பத்ரக் புறநகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கார்த்திக் ஜெனா.

இவரிடம் ராசிக்பாகா கிராமத்தில் ஒரு குடும்ப தகராறை விசாரிக்கும் பொறுப்பு தரப்பட்டது. ஆனால் இவர் அங்கு செல்லாமல் அந்த வழக்கை கையாள பியூஷ் பாண்டா என்ற இளைஞரை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கிராமத்துக்கு சென்ற பியூஷ் பாண்டா, பிரச்சினையை தீர்த்து வைக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், அவர் போலீஸ் இல்லை என தெரிந்து கொண்ட கிராம மக்கள், அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் கார்த்திக் ஜெனாவால் அனுப்பப்பட்டவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஜெனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT