இந்தியா

பூகம்பம் ஏற்பட்டபோது முதலில் உதவிய இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக பார்க்கிறோம்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘இந்​தி​யாவை நெருங்​கிய நட்பு நாடாக ஆப்​கானிஸ்​தான் பார்க்​கிறது’’ என இந்​தியா வந்​துள்ள ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அமிர் கான் முட்​டாகி தெரி​வித்​துள்​ளார்.

ஆப்​கானிஸ்​தானில் இருந்த அமெரிக்க தலை​மையி​லான நேட்டோ படை கடந்த 2021-ம் ஆண்டு வெளி​யேறியது. அதன்​பின் அங்கு ஆட்​சியை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். இதனால் காபூலில் செயல்​பட்டு வந்த தூதரகத்தை இந்​தியா மூடியது. ஒராண்டு கழித்து வர்த்​தகம், மருத்​துவ உதவி மற்​றும் மனி​தாபி​மான உதவி​களை அளிப்​ப​தற்​காக மட்​டும் சிறு அலு​வல​கத்தை காபூலில் இந்​தியா திறந்​தது. சீனா, ரஷ்​யா, ஈரான், பாகிஸ்​தான் மற்​றும் துருக்கி உட்பட சுமார் 1 டஜன் நாடு​கள் மட்​டுமே ஆப்​கானிஸ்​தானில் தூதரகத்தை வைத்​துள்​ளன.

இந்​நிலை​யில் ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அமிர் கான் முட்​டாகி, இந்​திய வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்​ரிமை துபா​யில் கடந்த ஜனவரி மாதம் சந்​தித்து பேசி​னார். அதன் பின் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரிட​மும் முட்​டாகி போனில் பேசி​னார். இரு நாடு​கள் இடையே அரசி​யல் மற்​றும் வர்த்தக உறவு​கள் குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக இந்​தியா சார்​பில் சிறப்பு தூதர் கடந்த ஏப்​ரல் மாதம் காபூல் சென்​றார்.

இதையடுத்து ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அமிர் கான் முட்​டாகி 6 நாள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். அவர் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை டெல்​லி​யில் நேற்று சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது முட்​டாகி கூறிய​தாவது:

ஆப்​கானிஸ்​தானில் சமீபத்​தில் பூகம்​பம் ஏற்​பட்​ட​போது, முதலில் உதவிய நாடு இந்​தி​யா. இந்​தி​யாவை நெருங்​கிய நட்பு நாடாக ஆப்​க​ானிஸ்​தான் பார்க்​கிறது. பரஸ்பர மரி​யாதை அடிப்​படை​யில் இந்​தி​யா​வுடன் வர்த்தக உறவை மற்​றும் மக்​கள் இடையே​யான உறவை மேம்​படுத்த நாங்​கள் விரும்​பு​கிறோம். இரு நாட்டு உறவு​களை வலுப்​படுத்த தூதரக உறவை ஏற்​படுத்​த​வும் நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம். நான் இந்​தி​யா​வில் இருப்​பது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. இரு நாடு​கள் இடையே​யான செயல்​பாடு​கள் அதி​கரிக்க வேண்​டும். எங்​கள் நாட்டை எந்த குழு​வும், மற்ற நாடு​களுக்கு எதி​ராக பயன்​படுத்த நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அமைச்​சர் ஜெய்​சங்கர் கூறுகை​யில், ‘‘ஆப்​கன் தலைநகர் காபூலில் 4 ஆண்​டு​களுக்கு முன்பு மூடப்​பட்ட தூதரகத்தை இந்​தியா மீண்​டும் திறக்​கும். இது இரு நாடு​கள் இடையே​யான தூதரக உறவு​கள் மேம்​படு​வ​தில்​ முக்​கிய​மான நடவடிக்​கை’’ என்​றார்​.

SCROLL FOR NEXT