இந்தியா

சோதனையின் போது ரூ.1.45 கோடி ஹவாலா பணத்தை சுருட்டிய 9 ம.பி. காவலர்கள் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை இரவு நடந்த வாகன சோதனை​யின்​போது பந்​தோல் காவல் நிலையை பொறுப்​பாளர் மற்​றும் காவலர்​கள் ஒரு நான்கு சக்கர வாக​னத்தை வழிமறித்​துள்​ளனர்.

அப்​போது அதில், மத்​தி​யப் பிரதேசத்​தில் உள்ள கட்​னி​யில் இருந்து மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள ஜல்​னா​விற்கு ஒரு பெரிய அளவி​லான தொகை கொண்டு செல்​லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஹவாலா பணம் என சந்​தேகப்​பட்ட போலீ​ஸார் அதனை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, ஓட்​டுநரை அடித்து விரட்டி விட்டு அந்​தப் பணத்தை தாங்​களே அபகரித்​துக் கொண்​டனர்.

பணத்தை அனுப்​பிய தொழில​திபரும், ஓட்​டுநரும் போலீஸில் புகார் அளித்​ததை அடுத்து ஐஜி பிரமோத் வர்மா விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார். அதன்​தொடர்ச்​சி​யாக , பந்​தோல் காவல் நிலைய சப்​-இன்​ஸ்​பெக்​டர் அர்​பித் பைராம் உட்பட 9 காவலர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில் கைப்​பற்​றப்​பட்ட பணம் ரூ.1.45 கோடி என்​பது தெரிய​வந்​துள்​ளது. இருப்​பினும், அந்த நான்கு சக்கர வாக​னத்​தில் ரூ.2.96 கோடிக்கு மேல் இருந்​த​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT