இந்தியா

லடாக் வன்முறைக்கு மத்திய பாஜக அரசே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆனந்த்

புதுடெல்லி: லடாக்கில் ஏற்பட்ட வன்முறையால் விலைமதிப்பில்லாத 4 உயிர்கள் பறிபோனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக வெளியீட்டுப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லடாக்கில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது துயரகரமானது. அரசின் தோல்வியடைந்த வாக்குறுதிகளை இது நினைவூட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம், அமைதிக்கு வழி வகுக்கும் என கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பதில், மத்திய அரசின் குறுகிய பார்வை ஜம்மு மற்றும் லடாக்கை வன்முறை நெருப்பில் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடி பாஜக அரசு உருவாக்கியது. ஆனால், தற்போது பாஜக மக்களின் கோரிக்கைகளை நியாயமற்ற முறையில் புறக்கணிக்க முயல்கிறது.

தங்களின் கண்ணியம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்க லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற அம்மக்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. இரக்கத்துடனும் அரசியல் சாதுர்யத்துடனும் அது அணுகப்பட வேண்டும். மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.

பின்னணி: லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.

இந்​நிலை​யில் நேற்று லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள் அங்​குள்ள லடாக் மலைப்​பகுதி மேம்​பாட்டு தன்​னாட்சி கவுன்​சில் அலு​வல​கம் மற்​றும் பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்​தினர். மேலும் போலீ​ஸார் மீது கற்​களை வீசிய அவர்​கள், சிஆர்​பிஎப் வேன் உட்பட பல வாகனங்​களுக்கு தீவைத்து எரித்​தனர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் வன்​முறை​யாளர்​களை விரட்​டினர். மேலும் கூடுதல் படை​யினர் வரவழைக்​கப்​பட்டு நிலை​மையை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த கலவரத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர், 60-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். லே மாவட்​டத்​தில் 5 மற்​றும் அதற்கு மேற்​பட்​டோர் ஒன்று கூட​வும் அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்​த​வும் தடை விதிக்​கப்​பட்டுள்​ளது. இந்​நிலை​யில் கலவரம் காரண​மாக பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் தனது போராட்​டத்தை வாபஸ் பெற்​றார். “இது இளைஞர்​களின் கோபம், புரட்​சி.

வன்​முறையை லடாக் இளைஞர்​கள் உடனடி​யாக நிறுத்த வேண்​டும். ஏனெனில் இது நமது நோக்​கத்​திற்கு தீங்கு விளைவிக்​கும், நிலை​மையை மேலும் மோச​மாக்​கும். லடாக்​கிலும் நாட்​டிலும் ஸ்திரமின்​மையை நாங்​கள் விரும்​ப​வில்​லை” என்று அவர் கூறி​னார். கோரிக்கை தொடர்​பாக அக்​டோபர்​ 6-ம்​ தேதி மீண்​டும்​ பேச்​சு​வார்​த்​தைக்​கு வரு​மாறு ல​டாக்​ பிர​தி​நி​தி​களை மத்​தி​ய அரசு அழைத்​துள்​ள நிலை​யில்​ அங்​கு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT