கோப்புப் படம் 
இந்தியா

அரசு மருத்துவமனைகளில் 24.4% பேர் உயிரிழப்பு: எஸ்ஆர்எஸ் ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசு மருத்துவமனைகளில் 24.4 சதவீதம் பேர் உயிரிழப்பதாக சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (எஸ்ஆர்எஸ்) புள்ளிவிவர அறிக்கை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் இறப்பதற்கு முன் நோயாளிகள் பெற்ற மருத்துவ உதவி குறித்த தரவுகளின்படி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 24.4 சதவீதம் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தனியார் மருத்துவமனைகளில் 15.5 சதவீதமாக உள்ளது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கவனித்தபோதிலும் 14.4 சதவீத நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.

ஆனால், உரிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லது பயிற்சி பெறாத மருத்துவப் பணியாளர்களால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது 45.7 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரியதாக உள்ளது. இவ்வாறு அந்த புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT