இந்தியா

கனடாவிடமிருந்து 2 காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி வந்தது கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘2025 கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

ஆய்வு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 2 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளது.

கனடாவில் ஹமாஸ், காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களான பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு அமைப்பு போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி உதவி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT