இந்தியா

ராஜஸ்தானில் கனமழையால் வெள்ளம்: 4 சிறார்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தவுசாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 25 மணி நேரத்தில் 29 செ.மீ. மழை பெய்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

உதய்பூரின் தபோக் பகுதியில் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி 4 சிறார்கள் உயிரிழந்தனர். பண்டியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 50 வயது பெண் இறந்தார். இதுபோல் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 65 வயது பெண் இறந்தார்.

ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க அஜ்மீர் கோட்டை சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் வாகனங்கள் சேதமடைந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT