இந்தியா

உலகளவில் ஆபரேஷன் சிந்தூருக்கு இடம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது.

ஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் ன்றாக நினைவுகூரப்படும். நாங்கள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்.

நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு சரியான பதிலடி இது. நமது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பொருளாதார மேலாண்மை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT