இந்தியா

எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடு: வீரர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இது வழக்கமான ஊடுருவல் முயற்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் ஊடுருவல்காரர்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சிக்கு ராணுவத்தின் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையின் போது துரதிருஷ்டவசமாக வீரர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT