இந்தியா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) சிறுநீரகக் கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காலமானார்.

உ.பி.யின் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த ஜாட் தலைவரான சத்யபால் மாலிக், முதல் முறையாக சவுத்ரி சரண் சிங்கின் பாரதிய கிரந்தி தளம் சார்பில் 1974-ல் எம்எல்ஏ ஆனார். பிறகு ஜனதா தளம், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு மாறினார்.

எம்.பி.யாக பதவி வகித்தார். 2004-ல் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2017-ல் பிஹார் ஆளுநராகவும் பிறகு 2018 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் ஆளுநராகவும் சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT