இந்தியா

'எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தந்திரம்' - பூபேஷ் பாகேலின் மகன் கைதுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை, மக்களின் குரலை நசுக்கும் என்றும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தந்திரம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாஜக அரசு சத்தீஸ்கரின் அனைத்து காடுகளையும் அதானிக்கு அர்ப்பணித்துள்ளது. காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன, PESA சட்டம் மற்றும் NGT உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் இந்த பிரச்சினையை சட்டப்பேரவையில் எழுப்பவிருந்தார். இதை தடுக்கவே, அமலாக்கத்துறை அதிகாலையில் அவரது வீட்டை சோதனை செய்து அவரது மகனைக் கைது செய்தது.

கடந்த 11 ஆண்டுகளில், இது போன்ற நடவடிக்கைகள் மக்களின் குரலை நசுக்கவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படும் தந்திரங்கள் என்பதை நாடு தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளது. ஆனால் இதுபோன்ற தந்திரங்களால் உண்மையை அடக்கவோ அல்லது எதிர்க்கட்சிகளை மிரட்டவோ முடியாது. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பூபேஷ் பாகேலுடன் உறுதியாக நிற்கிறார்" என்று தெரிவித்துள்ளார்

முன்னதாக, சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுபானக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று அமலாக்கத் துறையால் கைது செய்​யப்​பட்​டார்.

சத்​தீஸ்​கர் முழு​வதும் 750-க்​கும் மேற்​பட்ட மதுக்​கடைகளை மாநில அரசு நடத்தி வரு​கிறது. இதற்​காக தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது மது​பானங்​களை கொள்​முதல் செய்​த​தில் மிகப்​பெரிய அளவில் ஊழல் நடை​பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பரில் சத்​தீஸ்​கரில் விஷ்ணு தியோ சாய் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சிப் பொறுப்​பேற்​றது. இதன்​பிறகு மது​பான ஊழல் குறித்த விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. மாநில பொருளா​தார குற்​றப்​பிரிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தி​யது.

இதன் தொடர்ச்​சி​யாக சத்​தீஸ்​கரின் துர்க் மாவட்​டம், பிலாய் நகரில் உள்ள முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் கைது செய்​யப்​பட்​டார். இதன்​பிறகு ராய்ப்​பூர் நீதி​மன்​றத்​தில் அவர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அவரை 5 நாட்​கள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

SCROLL FOR NEXT